Tuesday, February 7, 2017

பன்னீரின் கண்கள் பணித்தது தமிழக மக்களுக்காக

பன்னீரின் கண்கள் பணித்தது தமிழக மக்களுக்காக அதுமட்டுமல்ல மக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட ஒரு தலைவராக தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார்.   அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களின் வாழ்த்துக்களோடும் அவர் அடுத்த நிலைக்குச் செல்ல நம் வாழ்த்துக்கள்.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள் அதுபோல சாதுவாக இருந்த அவர் தனக்கு பின்னால் நடக்கும் துரோகங்களைக் கண்டு கொதித்தெழுந்து இருக்கிறார்.  அவரை  இந்த நிலைக்கு தள்ளிய நிகழ்வு எதுவென்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவரின் நிலை உணர்ந்து அவருக்கு உறுதியான ஆதரவு தரவேண்டும்.

நான் சில மாதங்களுக்கு முன்பே என் சகாக்களிடம் சொன்னேன்.  அதிமுகவின் நிலை தடுமாற்றம் ஏற்பட வெகுநாட்கள் ஆகாது என்றேன்.  அது நடந்தேவிட்டது!