Tuesday, May 9, 2017

மாதா உன் கோவிலில், Maatha Un Kovilil (see lyrics below)

மாதா உன் கோவிலில்

மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,
மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,

தாயென்று உன்னைத்தான்,
தாயென்று உன்னைத் தான்..,
பிள்ளைக்குக் காட்டினேன்..,

மாதா.., மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,

மேய்ப்பன், இல்லாத மந்தை.., வழி மாறுமே..யே..யே..,
மேய்ப்பன், இல்லாத மந்தை, வழி மாறுமே..,
மேரி உன் ஜோதி கண்டால், விதி மாறுமே..,
மெழுகு போல், உருகினோம், கண்ணீரை மாற்ற வா..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,

காவல் இல்லாத ஜீவன், கண்ணீரிலே..,
காவல் இல்லாத ஜீவன், கண்ணீரிலே..,
தரை கண்டிடாத ஓடம், தண்ணீரிலே..,
அருள்தரும், திருச்சபை, மணியோசை கேட்குமோ..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,

பிள்ளை, பெறாத பெண்மை, தாயானது..,
பிள்ளை, பெறாத பெண்மை, தாயானது..,
அன்னை, இல்லாத மகனை, தாலாட்டுது..,
கர்த்தரின்.., கட்டளை.., நான், என்ன சொல்வது..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,
தாயென்று உன்னைத் தான்,
தாயென்று உன்னைத் தான்..,
பிள்ளைக்குக் காட்டினேன்..,
மாதா.., மாதா உன் கோவிலில்..,
மணி தீபம் ஏற்றினேன், ம்...ம்..ம்..ம், ம்ம்ம்..ம்ம்ம், - \

Maatha Un Kovilil Mani Dheepam - Movie:- ACHCHANI (அச்சாணி)

PLease see this video : https://youtu.be/YipbnUZjmuY