Tuesday, October 24, 2017

உலக மக்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மிக பெரியக் கேள்வி?

உலக மக்களே!!

நல்லவனை எப்படி கண்டுக்கொள்வது ?  இது தான் இன்று உலக மக்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மிக பெரியக் கேள்வி?

நாம் எப்போதுமே உலுக்கிக்கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் எதிர்பாளர்களாக பழகிவிட்டோம்.  அதை மனதிலேயே பூட்டி வைத்துக்
கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் சேகுவாராக்கள் உருவாக்கலாம் ஆனால் ஒரு ஷேக்குவாராக்கள் உருவாகிவிடக்கூடாது.  உலகை ஆளத் துடிக்கும் தீவிரவாதிகளின் கூடாரங்களாக இந்த உலகம் மாறிவிடக்கூடாது என்பதுதான் நாம் அறிய வேண்டிய விஷயம்.

சேக்குவாராக்கள் என்று நான் சொன்னது உலகை ஆள த் துடிக்கும் தீய எண்ணங்களைகொண்டவர்களை பற்றி  குறிப்பிட்டேன்.

சில நேரங்களில் உண்மைகள் பலமுறை சொல்லப்பட்ட, சொல்லப்படுகின்ற பொய்களால் அந்த பொய்கள் உண்மையாக மாற்றப்படத்துடிக்கும் சில
எதிர்மறைவினை செய்யக்கூடிய சில உலகத் தலைவர்களுக்கு இது சமர்ப்பணம்.

இதைப் பற்றிய விரிவான உலக அலசலை சில மாதங்களுக்கு பிறகு எழுதவிருக்கிறேன்.  தங்கள் மேலான ஆதரவுடன் உங்கள் நான்.,.........






Friday, July 7, 2017

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே





அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே பட்டாம்பூச்சி பிடித்தவள்  தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ மெளனத்தில் நீ இருந்தால்  யாரை தான் கேட்பதிப்போ..... ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஓடைக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு  இவ வெடிச்சி நிக்குற பருத்தி  தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே  ஏ..ஏ..ஏ..ஏ..ஏலலோ..ஏலலோ.. ஏலலோ..ஏல..லோ..ஏலே..ஏ.. மாமனே உன்னை காண்காம வட்டியில் சோறும் உண்காம பாவி நான் பருத்தி நாரா போனேனே காகம் தான் கத்தி போனாலோ கதவு தான் சத்தம் போட்டாலோ உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடைக்கரையோரம்  கத்தியே உன் பேர் சொன்னேனே ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்  கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும்  நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே முத்து மாமா என்னை விட்டு போகாதே- என்  ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே தாவணி பொண்ணே சுகந்தானா தங்கமே தளும்பும் சுகந்தானா பாறையில் சின்ன பாதம் சுகந்தானா தொட்ட பூ எல்லாம் சுகந்தானா தொடாத பூவும் சுகந்தானா தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா அயித்தயும் மாமனும் சுகந்தானா ஆத்துல மீனும் சுகந்தானா அயித்தயும் மாமனும் சுகந்தானா ஆத்துல மீனும் சுகந்தானா அன்னமே உன்னையும் என்னையும்  தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ஓடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி  தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ படம்:- கிழக்கு சீமையிலே  வெளியீடு:- 13th நவம்பர் 1993; இசை:- .A.R.ரஹ்மான்; பாடல் வரிகள்:- வைரமுத்து; பாடியவர்கள்:- மனோ & சுஜாதா; நடிப்பு:- விக்னேஷ் & R.V.அஷ்வினி. 

Tuesday, May 9, 2017

மாதா உன் கோவிலில், Maatha Un Kovilil (see lyrics below)

மாதா உன் கோவிலில்

மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,
மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,

தாயென்று உன்னைத்தான்,
தாயென்று உன்னைத் தான்..,
பிள்ளைக்குக் காட்டினேன்..,

மாதா.., மாதா உன் கோவிலில்
மணித் தீபம் ஏற்றினேன்,

மேய்ப்பன், இல்லாத மந்தை.., வழி மாறுமே..யே..யே..,
மேய்ப்பன், இல்லாத மந்தை, வழி மாறுமே..,
மேரி உன் ஜோதி கண்டால், விதி மாறுமே..,
மெழுகு போல், உருகினோம், கண்ணீரை மாற்ற வா..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,

காவல் இல்லாத ஜீவன், கண்ணீரிலே..,
காவல் இல்லாத ஜீவன், கண்ணீரிலே..,
தரை கண்டிடாத ஓடம், தண்ணீரிலே..,
அருள்தரும், திருச்சபை, மணியோசை கேட்குமோ..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,

பிள்ளை, பெறாத பெண்மை, தாயானது..,
பிள்ளை, பெறாத பெண்மை, தாயானது..,
அன்னை, இல்லாத மகனை, தாலாட்டுது..,
கர்த்தரின்.., கட்டளை.., நான், என்ன சொல்வது..,

மாதா.., மாதா உன் கோவிலில்,
மணி தீபம் ஏற்றினேன்,
தாயென்று உன்னைத் தான்,
தாயென்று உன்னைத் தான்..,
பிள்ளைக்குக் காட்டினேன்..,
மாதா.., மாதா உன் கோவிலில்..,
மணி தீபம் ஏற்றினேன், ம்...ம்..ம்..ம், ம்ம்ம்..ம்ம்ம், - \

Maatha Un Kovilil Mani Dheepam - Movie:- ACHCHANI (அச்சாணி)

PLease see this video : https://youtu.be/YipbnUZjmuY

Tuesday, February 7, 2017

பன்னீரின் கண்கள் பணித்தது தமிழக மக்களுக்காக

பன்னீரின் கண்கள் பணித்தது தமிழக மக்களுக்காக அதுமட்டுமல்ல மக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட ஒரு தலைவராக தன்னை முன்னிலைப்படுத்த முயல்கிறார்.   அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல, தமிழக மக்களின் வாழ்த்துக்களோடும் அவர் அடுத்த நிலைக்குச் செல்ல நம் வாழ்த்துக்கள்.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பார்கள் அதுபோல சாதுவாக இருந்த அவர் தனக்கு பின்னால் நடக்கும் துரோகங்களைக் கண்டு கொதித்தெழுந்து இருக்கிறார்.  அவரை  இந்த நிலைக்கு தள்ளிய நிகழ்வு எதுவென்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவரின் நிலை உணர்ந்து அவருக்கு உறுதியான ஆதரவு தரவேண்டும்.

நான் சில மாதங்களுக்கு முன்பே என் சகாக்களிடம் சொன்னேன்.  அதிமுகவின் நிலை தடுமாற்றம் ஏற்பட வெகுநாட்கள் ஆகாது என்றேன்.  அது நடந்தேவிட்டது!


Tuesday, January 17, 2017

வாடிவாசலுக்கு வாடா! தமிழா!!

வாடிவாசலுக்கு வாடா! தமிழா!
வாடிவாசலுக்கு வாடா! தமிழா!!

நெஞ்சை நிமிர்த்தி வாடா!
நண்பா வெற்றிகொள்வோம் வாடா!

நேசம் கொள்வோம்
தேசம் வெல்வோம் வாடா!

உச்சம் வென்று உயரே பறப்போம்  வாடா!
உணர்வை வென்று அறிவை தொடர்வோம் வாடா!

செந்தமிழ் நாட்டின் உணர்வை
ஒன்றாக்கி வெற்றியை வென்றெடுப்போம் வாடா!

மரத்தமிழனின் மாறா உணர்வை
மாண்போடு சேர்த்து வெற்றிக்கொள்வோம் வாடா!

தமிழனின் வீரத்திற்கு சோதனை என்றதும்
உலகையே  உன்னை உற்று நோக்க வாய்த்த வீரா!

முத்தமிழ் சிந்தனை கொண்டே
இந்த உலகை வெல்ல ஒன்று சேர்வோம் வாடா!

ஏறு தழுவும் விழாவை பொங்கல் நாளில்
இனி உலகமே கொண்டாட விழைவோம் வாடா!

சல்லிகளாய் சிதைந்திருந்த தமிழனின்
நெஞ்சை பிளக்க பிளக்க வந்த பீட்டா!
பீட்டாவை ஓடவைப்போம் வாடா!

இனி வாய்திறக்க முடியா நிலையடைய
போடுவோம் பெரிய பூட்டா!

பீட்டாவிற்கு  காட்டுவோம் டாடா!
இனி அது பீட்டா இல்லை நாம் போடும் பேட்டா !

ஜல்லிக்கட்டுக்கு தடை போடா
அரசை கொண்டுவர ஒன்றுசேர்வோம் வாடா!

அரசியலில்லா போராட்டம் கண்டு
இந்திய அரசாங்கமே குலை நடுங்கவைப்போம் வாடா!

தேசியம் என்ற சொல்லுக்கே சோதனை
தமிழன் என்ற சொல்லே நமது சாதனை

காளையும், சோலையுமாய் வாழ்ந்த
தமிழன் வாழ்வில் சோதனை
அரசியல்வாதிகளின் இந்த ஐம்பது
ஆண்டுகாலச் சாதனையை முறியடிப்போம் வாடா!

வென்றெடுப்போம் வென்றெடுப்போம்
தமிழனின் பழங்கால வாழ்வை வென்றடுப்போம் வாடா!

பல்லாயிரம் ஆண்டாய் உலகையாண்ட
தமிழனின் புகழை மீண்டும் பறையறைவோம் வாடா!


உலகின் முதல் மனிதன்
உலகின் முதல் மொழி
உலகின் முதல் நாகரீகம்
உலகின் முதல் போராளி
உலகின் முதல் ஆட்சியாளன்
உலகின் முதல் இனம்
என்ற வரலாற்றை பறைசாற்ற ஒன்றுபடுவோம்! தோழா!!







Saturday, January 14, 2017

த்ரிஷாவும் ஜல்லிக்கட்டும்

த்ரிஷாவும் ஜல்லிக்கட்டும் சில வருடங்களுக்கு முன் அவர் பேசியவற்றை யோசித்தால் எப்போதும் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிவந்தது எல்லோருக்கும் தெரியும்.

திரிஷா அவர்கள் தமிழனின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் என்னையும் என் குடும்பத்தை பற்றி விமரிசிப்பவன் தமிழனா?  தமிழனுக்கு இது அழகல்ல என்று விமர்சித்து ட்விட்டர் தளத்திலிருந்தும் வெளியேறினார்.

நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் நடிகை திரிஷா அவர்களிடம் கேட்கிறேன்.  தமிழனின் பணத்தில் வாழும் நீங்கள் தமிழனுக்கு எதிராக பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

ஒவ்வொரு தமிழனின் உணர்வுபூர்வமான, பாரம்பரியத்தை புரிந்துகொள்ள முடியாதவர் தமிழ்நாட்டில் இருக்க வேண்டாம்.

நடிகர் கமல் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்தில் கண்ணியும், காலையும் தமிழகத்தில் வாழ வழிசெய்வோம் என்றார்.  திரிஷா ஒரு கன்னியா என்பதற்கு அவர்தான்   பதில் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு தமிழனின் நாடிதுடிப்பும் அவர்களின் பாரம்பரிய பரிபாலனங்களை எதிர்க்கின்ற யாரையும் மரியாதையுடனேயே நடத்திவந்துள்ளனர்.

தமிழன் கோபத்தின் உச்சியில் இருக்கும் இந்நேரத்தில் அவர் அமைதி காத்து, எங்களின் கோபத்தை தூண்டவேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.




Monday, January 9, 2017

தமிழகமும் ஜல்லிக்கட்டும்

தமிழக மக்கள் எவ்வளவு தூரம் 'இந்தியன்' என்ற தேசிய ஒற்றுமையில் இருந்து வெகு தள்ளி வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு ஜல்லிக்கட்டு மிகப்பெரிய உதாரணம்.

ஏன் தமிழன் ஜல்லிக்கட்டு விளையாடக்கூடாது?  தேசிய மற்றும் இயையாண்மையை பாதிக்கின்ற வகையில் தமிழன் நடந்துகொள்ளக்கூடாது.  கர்நாடகம் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.  கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.  ஆனால் தமிழன் மட்டும் மதிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி சொல்கிறது.

நேர்மையை பற்றி பேசுகின்ற பாரதீய ஜனதா கட்சி எதற்காக தமிழனுக்கு எதிராக, தமிழ் நாட்டிற்கு எதிராக செயல்படுகிறது.  தமிழன் பாரதீய ஜனதாவிற்கு ஒட்டு போடமாட்டான்.  ஆனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அவர்கள் கட்சி வளர வேண்டிய கட்டாயம், அதனால் அவர்கள் நடுநிலை வகிக்கிறார்கள்.

பத்தாயிரம் ஆண்டுகளாக காளைகளோடு விளையாடிய தமிழன் சில வருடங்களாக விளையாட முடியவில்லை.  ஏன் ?

தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்படவேண்டும், ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கு மத்திய அரசும், சில வெளிநாட்டு நிறுவனங்களும் சாதி செய்வது அப்பட்டமாக தெரிகிறது.

அதை தமிழக மக்கள் குறிப்பாக தமிழக இளைஞர்கள் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழகம் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்க்கப்படுகிறது.  மக்கள் மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராவதை தவிர வேறு வழியில்லை.