வாடிவாசலுக்கு வாடா! தமிழா!
வாடிவாசலுக்கு வாடா! தமிழா!!
நெஞ்சை நிமிர்த்தி வாடா!
நண்பா வெற்றிகொள்வோம் வாடா!
நேசம் கொள்வோம்
தேசம் வெல்வோம் வாடா!
உச்சம் வென்று உயரே பறப்போம் வாடா!
உணர்வை வென்று அறிவை தொடர்வோம் வாடா!
செந்தமிழ் நாட்டின் உணர்வை
ஒன்றாக்கி வெற்றியை வென்றெடுப்போம் வாடா!
மரத்தமிழனின் மாறா உணர்வை
மாண்போடு சேர்த்து வெற்றிக்கொள்வோம் வாடா!
தமிழனின் வீரத்திற்கு சோதனை என்றதும்
உலகையே உன்னை உற்று நோக்க வாய்த்த வீரா!
முத்தமிழ் சிந்தனை கொண்டே
இந்த உலகை வெல்ல ஒன்று சேர்வோம் வாடா!
ஏறு தழுவும் விழாவை பொங்கல் நாளில்
இனி உலகமே கொண்டாட விழைவோம் வாடா!
சல்லிகளாய் சிதைந்திருந்த தமிழனின்
நெஞ்சை பிளக்க பிளக்க வந்த பீட்டா!
பீட்டாவை ஓடவைப்போம் வாடா!
இனி வாய்திறக்க முடியா நிலையடைய
போடுவோம் பெரிய பூட்டா!
பீட்டாவிற்கு காட்டுவோம் டாடா!
இனி அது பீட்டா இல்லை நாம் போடும் பேட்டா !
ஜல்லிக்கட்டுக்கு தடை போடா
அரசை கொண்டுவர ஒன்றுசேர்வோம் வாடா!
அரசியலில்லா போராட்டம் கண்டு
இந்திய அரசாங்கமே குலை நடுங்கவைப்போம் வாடா!
தேசியம் என்ற சொல்லுக்கே சோதனை
தமிழன் என்ற சொல்லே நமது சாதனை
காளையும், சோலையுமாய் வாழ்ந்த
தமிழன் வாழ்வில் சோதனை
அரசியல்வாதிகளின் இந்த ஐம்பது
ஆண்டுகாலச் சாதனையை முறியடிப்போம் வாடா!
வென்றெடுப்போம் வென்றெடுப்போம்
தமிழனின் பழங்கால வாழ்வை வென்றடுப்போம் வாடா!
பல்லாயிரம் ஆண்டாய் உலகையாண்ட
தமிழனின் புகழை மீண்டும் பறையறைவோம் வாடா!
உலகின் முதல் மனிதன்
உலகின் முதல் மொழி
உலகின் முதல் நாகரீகம்
உலகின் முதல் போராளி
உலகின் முதல் ஆட்சியாளன்
உலகின் முதல் இனம்
என்ற வரலாற்றை பறைசாற்ற ஒன்றுபடுவோம்! தோழா!!
வாடிவாசலுக்கு வாடா! தமிழா!!
நெஞ்சை நிமிர்த்தி வாடா!
நண்பா வெற்றிகொள்வோம் வாடா!
நேசம் கொள்வோம்
தேசம் வெல்வோம் வாடா!
உச்சம் வென்று உயரே பறப்போம் வாடா!
உணர்வை வென்று அறிவை தொடர்வோம் வாடா!
செந்தமிழ் நாட்டின் உணர்வை
ஒன்றாக்கி வெற்றியை வென்றெடுப்போம் வாடா!
மரத்தமிழனின் மாறா உணர்வை
மாண்போடு சேர்த்து வெற்றிக்கொள்வோம் வாடா!
தமிழனின் வீரத்திற்கு சோதனை என்றதும்
உலகையே உன்னை உற்று நோக்க வாய்த்த வீரா!
முத்தமிழ் சிந்தனை கொண்டே
இந்த உலகை வெல்ல ஒன்று சேர்வோம் வாடா!
ஏறு தழுவும் விழாவை பொங்கல் நாளில்
இனி உலகமே கொண்டாட விழைவோம் வாடா!
சல்லிகளாய் சிதைந்திருந்த தமிழனின்
நெஞ்சை பிளக்க பிளக்க வந்த பீட்டா!
பீட்டாவை ஓடவைப்போம் வாடா!
இனி வாய்திறக்க முடியா நிலையடைய
போடுவோம் பெரிய பூட்டா!
பீட்டாவிற்கு காட்டுவோம் டாடா!
இனி அது பீட்டா இல்லை நாம் போடும் பேட்டா !
ஜல்லிக்கட்டுக்கு தடை போடா
அரசை கொண்டுவர ஒன்றுசேர்வோம் வாடா!
அரசியலில்லா போராட்டம் கண்டு
இந்திய அரசாங்கமே குலை நடுங்கவைப்போம் வாடா!
தேசியம் என்ற சொல்லுக்கே சோதனை
தமிழன் என்ற சொல்லே நமது சாதனை
காளையும், சோலையுமாய் வாழ்ந்த
தமிழன் வாழ்வில் சோதனை
அரசியல்வாதிகளின் இந்த ஐம்பது
ஆண்டுகாலச் சாதனையை முறியடிப்போம் வாடா!
வென்றெடுப்போம் வென்றெடுப்போம்
தமிழனின் பழங்கால வாழ்வை வென்றடுப்போம் வாடா!
பல்லாயிரம் ஆண்டாய் உலகையாண்ட
தமிழனின் புகழை மீண்டும் பறையறைவோம் வாடா!
உலகின் முதல் மனிதன்
உலகின் முதல் மொழி
உலகின் முதல் நாகரீகம்
உலகின் முதல் போராளி
உலகின் முதல் ஆட்சியாளன்
உலகின் முதல் இனம்
என்ற வரலாற்றை பறைசாற்ற ஒன்றுபடுவோம்! தோழா!!