Friday, December 9, 2016

எழுத்து பயணம்

எழுத்து பயணம் நான் என்றோ தொடங்கியிருக்க வேண்டிய ஒன்று.  காலம் கடந்த செயலாக இருந்தாலும் எனது கவிதைகள் மற்றும் எனது எண்ணங்கள் இனி இங்கு நிறைய பதிவிடப்படும்.   பிடித்தவர்கள் என்னை தொடரலாம்.

நான் எனது ஏழாம்  வகுப்பை தொட்டபோதே எழுதத்துவங்கினேன்.  ஆனால் சிலபல காரணங்களால் என்னால் அதை தொடர முடியவில்லை.  இப்போதிலிருந்து நானும் எனது எழுத்துக்களும் இனி உங்கள் முன்னால் இந்த வலையில் சமர்ப்பிக்கப்படும்.

சாண்டில்யன் அவர்களின் நூல் படித்து வளர்ந்தேன், பிறகு சுஜாதா அவர்களின் நூல்கள் என்று நிறைய படித்தேன்.  ஆனால் சென்னை வந்த பிறகு படிக்க மறந்தேன், என்னை பற்றிய சிந்தனை கூட குறைந்து போனது.  ஏன் என்று தெரியவில்லை?

மீண்டும் என்னை புதுப்பித்துக்கொள்ள முனைகிறேன்.  அதற்காக நிறைய படித்து பிடித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளை ஆசைப்படுகிறேன்.  மீண்டும் சந்திப்போம் 

No comments:

Post a Comment